தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையின் பல இடங்களில் இரவு முழுவதும் பரவலாக பெய்த சாரல் மழை பெய்தது.
அந்த வகையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.