fbpx

பாண்டவர்களால் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில்.. இயற்கை எழில் கொஞ்சும் அழகு..!! எங்க இருக்கு தெரியுமா..?

அமரேஷ்வர் மகாதேவ் கோயில், அமைதி மற்றும் தெய்வீகத்தை நாடும் பயணிகளுக்கு ஒரு ஆன்மீக சொர்க்கமாகவும், மறைக்கப்பட்ட ரத்தினமாகவும் உள்ளது. அதன் பண்டைய பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற இந்த கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

அம்ரேஷ்வர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில் சில்ஹாரா மன்னர் சித்தராஜாவால் கட்டப்பட்டு 1065-ம் ஆண்டு அவரது மகன் முன்னியாக் மூலம் புதுப்பிக்கப்பட்டது. பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாச காலத்தில் ஒரே நாள் இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது. 

அடர்ந்த காடுகள் மற்றும் வளைந்து செல்லும் சாலைகளால் சூழப்பட்ட இந்த புனித கோவிலுக்கு பயணம் செய்வது, யாத்திரைக்கு ஒரு சாகச வசீகரத்தை சேர்க்கிறது. உள்ளூரில் அம்ரேஷ்வர் தாம் என்று அழைக்கப்படும் அம்ரேஷ்வர் மகாதேவ் கோயில், அதன் பிரமாண்டமான சிவலிங்கத்துடன் தனித்து நிற்கிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிக்க வைக்கும் காட்சியாகும்.

பாண்டவர்கள் கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. எனவேதான் கோயில் கருவறையின் மேற்பகுதி இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. மேலும் பாண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல ஒரு கி.மீ நீளத்திற்குச் சுரங்கப்பாதை அமைத்திருந்தனர். ஆனால் பின்னர் இப்பாதை மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் கருவறையில் சிவன் சுயம்புவாக வீற்றிருக்கிறார்.

அனைத்து பக்தர்களும் கோயில் கருவறைக்குள் சென்று சிவனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் சுயம்புலிங்கம் அருகில் அமர்ந்து பூஜைகள் செய்வார்கள். தற்போது தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் வால்துனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா ஆலயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அம்பர்நாத் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

கோயிலில் பிற தெய்வங்களின் சந்நிதி இல்லை, சிவன் மட்டுமே வீட்டிருக்கிறார். இந்தக் கோயில் பெரிய அளவில் கவனிப்பு இல்லாமல் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 12 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாக வரவேண்டியது. ஆனால் மொகலாய ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிராவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தையும் இடித்தனர். எனவே இந்தக் கோயில் இருப்பதை வெளியில் பிரபலப்படுத்தாமல் இருந்தனர்.

எப்படி செல்வது? தமிழகத்தில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் ரயில் மார்க்கமாக மும்பை வந்தால் கல்யாண் என்ற ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்கிப் புறநகர் ரயில்கள் மூலம் அம்பர்நாத் செல்லலாம். அம்பர்நாத் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

Read more:“தயவு செஞ்சு என்னோட புருஷன கொன்னுடு டா” கள்ளக்காதலுக்காக மனைவி போட்ட பிளான்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..

English Summary

Amreshwar Mahadev Temple: A Divine Retreat Amidst Amarkantak’s Green Forests

Next Post

சூப்பர் அறிவிப்பு...! ஆதார் போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும்...!

Mon Mar 3 , 2025
Farmers will be given a separate identity card like Aadhaar

You May Like