சியாச்சின் சிகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த இளம்வயது அக்னி வீரர் லஷ்மன் குடும்பத்தினருக்கு, 48 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையும், 44 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும் வழங்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
உலகின் உயரமான ராணுவ தளம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரம். இங்கு எப்போதும் கடும் பனிப்பொழிவு நிலவும். குளிர்காலங்களில் மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை சரியும். இத்தகைய கடுமையான வானிலையில், இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் இந்திய ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட அக்னிவீரர்கள் எனும் இளம் வயது வீரர்களும் பணியில் உள்ளனர். இங்கு பணியில் இருந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கவதே அக்ஷய் லஷ்மன், நேற்று உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்தது. இதையடுத்து இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்து படை வீரர்களும், அந்த அக்னிவீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து உயிரிழந்த அக்னிவீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, யாச்சினில் அக்னிவீரர் அக்ஷய் லட்சுமணன் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு இளைஞன் நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன். ஆனால் அந்த வீரனுக்கு பணிக்கொடை இல்லை, அவரது சேவையின் போது வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, அந்த மாவீரனை தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டம் தான் அக்னிவீரர் திட்டம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ராகுல் காந்தி.
இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், உயிரிழந்த லஷ்மன் குடும்பத்தினருக்கு, 48 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையும், 44 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அக்னிவீரர்களின் விதிமுறைகள், மற்றும் போரில் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 48 லட்சம் பங்களிப்பு அல்லாத காப்பீடு. கருணைத் தொகை ரூபாய் 44 லட்சம். அக்னிவீர் (30%) பங்களிப்புடன் சேவா நிதி, அரசாங்கத்தின் சமமான பங்களிப்புடன், அதன் மீதான வட்டி. உறவினர்கள், இறந்த தேதியிலிருந்து நான்கு ஆண்டுகள் முடிவடையும் வரை (ரூ. 13 லட்சத்திற்கு மேல்) மீதமுள்ள பதவிக்காலத்திற்கான ஊதியத்தையும் பெறுவார்கள். மீதமுள்ள பதவிக்காலம் மற்றும் ஆயுதப் படைகளின் போர் விபத்து நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் பங்களிப்பு ஆகும் என்றும் இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.