fbpx

மனைவியை பிரிந்து கணவன் வேறொரு பெண்ணுடன் வாழ்வது கொடுமை என்று அர்த்தமல்ல!… டெல்லி உயர் நீதிமன்றம்!

சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில், மனைவியைப் பிரிந்து நீண்ட காலம் வேறொரு பெண்ணுடன் கணவன் வாழ்வது கொடுமையானது அல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அங்குள்ள குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு, அவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புகள் இல்லாத சூழலிலேயே இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கணவன் மனைவிக்கு இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகத் தெரிவித்த நீதிபதி, கணவர் மீது மனைவி அளித்த கிரிமினல் புகாரையும் அவர் சுட்டிக்காட்டினார். இவற்றைக் குறிப்பிட்ட நீதிபதி இதனால் கணவர் வாழ்க்கையில் அமைதி மற்றும் தாம்பத்திய உறவை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கணவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை அவமரியாதை செய்ததால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மன வேதனையும் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. இதில் உள்ள சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது மனைவியின் நடத்தை நிச்சயமாகக் கொடூரமானதாக இருந்துள்ளது என்று கூறலாம்.

புகார் அளித்த பெண்ணின் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம் அமைதியையும் ஆறுதலையும் பெற்றிருக்கலாம். விவாகரத்து மனு நிலுவையில் உள்ள சமயத்தில் இது நடந்திருந்தாலும் இது மனைவியைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. விவாகரத்து பெறுவதைத் தடுக்கும் வகையில் மனைவிக்கு அந்த கணவர் வேறு எந்தக் கொடூரச் செயலையும் செய்ததாகத் தெரியவில்லை. வேறு எந்தவொரு விஷயத்தையும் மனைவியால் நிரூபிக்க முடியவில்லை” என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், குடும்ப நல நீதிமன்றம் மனைவி கணவனை கொடுமைப்படுத்தியதாக முடிவு செய்து அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

உடனடி வழக்கில், தன் மீதான கொடூரக் குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் கூறி, கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்ற உத்தரவை மனைவி சவால் செய்தார். கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார்.எவ்வாறாயினும், கணவரின் இரண்டாவது திருமணம் பற்றிய விவரங்கள் அல்லது ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது

Kokila

Next Post

1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்...! பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்...!

Sat Sep 16 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த தொகை கிடைத்து விட வேண்டும் என்பதால் நேற்று முன்தினம் பணிகள் தொடங்கி பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதற்கு பெண்கள் திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் திட்டத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் […]
மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

You May Like