fbpx

நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணமானவரா? பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை.!

மலையாள படப்பிடிப்பில் வெளிவந்த ‘ஹெலன்’ திரைபட ரீமேக்கான ‘மிலி’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், இதன் ப்ரொமோஷன்கான பணியில் நடிகை ஜான்வி கபூர் படு பிசியாக ஈடுபட்டு வருகின்றார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம், தனது சுயம்வரத்தில் கலந்துகொள்ள மூன்று நடிகர்களைத் தேர்வு செய்யுமாறு கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் அளித்த பதில்களே தற்போது சர்ச்சைகளாக கிளம்பியுள்ளன.

பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டன என புன்னகையுடன் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து இன்று அதிக அளவில் பேசப்பட்டு பெண்களை மிகவும் கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை அவருக்கு பரிந்துரை செய்தனர்.

சட்டென்று அதற்கு விஜய் தேவரகொண்டா பற்றி, “விஜய் தேவரகொண்டாவும் திருமணமானவர் தான்.” என சிரித்துக் கொண்டே குறும்பாக பதில் அளித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனாவும்,நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பலரால் சில ஆண்டுகளாக கிசுகிசு பேசப்பட்டு வந்த நிலையில், ஜான்வி கபூரின் இத்தகைய பதில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ரசிகர்களுக்கிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்துள்ள பெரும் வரவேற்பைப் பெற்றது. ராஷ்மிகா டோலிவுட்டில் கால் பதித்த நாள் முதல் நெருங்கிய நண்பர்களாக இவர்கள் இருவருமே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆன் ஸ்க்ரீன் மட்டுமின்றி ஆஃப் ஸ்க்ரீனிலும் இவர்களது கெமிஸ்ட்ரியை இருவரது ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர்.

Rupa

Next Post

கண்ணோஜ் சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் அதிரடி தகவல்கள்.. ஆபத்து கட்டத்தை தாண்டாத சிறுமி.!

Fri Oct 28 , 2022
உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 வயதான அந்த சிறுமி நேற்று மாலை உண்டியல் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன் […]

You May Like