சென்னை உயர்நீதிமன்றத்தின் காலிப்பணியிடங்கள் குறிப்பிட்ட தேர்வு முறைகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பட உள்ளது.
காலிப்பணியிடங்கள் : 75
கல்வித் தகுதி : B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science, Software Engineering, AI and Machine Learning) / M.Tech (IT) / M.S (IT) இவற்றுள் ஏதேர்னும் ஒரு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : நவம்பர் 22- தேதி அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000
பணியிடம் : சென்னை, மதுரை
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கணினி சார்ந்து 50 வினாக்களும், பொது அறிவியலில் இருந்து 10 வினாக்களும் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.12.2024
Read more ; கஞ்சா விற்பதில் முன்விரோதம்..!! இளைஞரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிய கும்பல்..!! அப்ப கூட வெறி அடங்கல..!!