ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
இந்த வாரம் சீனாவில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனையும் நான்கு உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது… சீன அதிபரின் சர்வாதிகார போக்கை இது காட்டுகிறது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. லஞ்சம், பங்குச் சந்தை கையாளுதல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக சீன முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சன் லிஜூனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது என்றும், அவரது தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சன் லிஜூன் மீது $923 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.. 2001 முதல் ஏப்ரல் 2020 வரை தனது பல்வேறு பதவிகளைப் பயன்படுத்தி, மொத்தம் $92.30 மில்லியனுக்கும் அதிகமான பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பெற்றார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டில் ஐந்து முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னதாக சீனாவில், ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்ததற்காக இரண்டு மூத்த அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.. அந்த மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.. எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற 2 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது..