தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னரே கிளப்புகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு மட்டுமே மதுபானம் விற்பதற்கு தமிழக அரசால் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள் மற்றும் வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறலாம். அதற்கு சிறப்பு உரிமை வழங்கப்படுவதற்கான சட்ட திருத்தம் தமிழக அரசின் சார்பாக செய்யப்பட்டுள்ளது .
இந்த சிறப்பு உரிமை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு செல்லுபடி ஆகும். கட்டணம் செலுத்திய பின்னர் ஆட்சியர் ஒப்புதலுடன் சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி எல்லைக்கட்பட்ட பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு உரியமும் பெற்றவர் மாநகர காவல் துறை ஆணையரிடம் நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமம் பெற்றவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விருந்தினருக்கு பரிமாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.