fbpx

ஏர்போர்ட்டில் ஷாருக்கான் அதிரடியாக தடுத்து நிறுத்தம்…

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர் விதிகளை மீறி அதிக விலையுடைய ஆடம்பர கைக்கடிகாரங்களை எடுத்துச் சென்றதற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்காக நடிகர் ஷாருக்கான் ரூ.6.83 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ஷாருக்கான் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவது இது முதல்முறை கிடையாது. கடந்த 2011ம் ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகளுடன் அதிக அளவிலான லக்கேஜ் உடன் எடுத்துச் சென்றதற்ககாக சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.அ வர்களுடன் நடிகர் ஷாருக்கான் கடும் வாக்குவாதம் செய்தார்.இதற்காக அவர் ரூ.1.5 லட்சம் அபராதம் செலுத்தினார். ஷாருக்கான் நடித்து வெளியாக உள்ள பத்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம்தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜவான், துங்கி மற்றும் சல்மான் கான் நடிக்கும் ’டைகர்-3’’ திரைப்படத்தில் ஒரு சிறு சிறப்பு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

Next Post

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி நளினி வெளியே வந்தார்...

Sat Nov 12 , 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், […]
#Breaking..!! ராஜீவ் காந்தி கொலை வழக்கு..!! நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like