தமிழில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் கஞ்சா கருப்பு. பாலா இயக்கத்தில் நடித்த பிதாமகன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தடுத்து ராம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, சிவப்பதிகாரம், பருத்தி வீரன் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கஞ்சா கருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஒரு சர்ச்சையான போட்டியாளராக பார்க்கப்பட்டார். குறிப்பாக பரணியை இவர் சிலிண்டரை தூக்கி அடிக்க போன சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சென்னையில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகிறது.
இந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் தற்போது போலீசில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். கஞ்சா கருப்பு தனக்கு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்து இருக்கிறார் என்றும், வீட்டை உள்வாடகைக்கு விட்டிருக்கிறார் என்றும் புகார் கூறி உள்ளார். மேலும் குடி, மற்ற விஷயங்கள் என வீட்டை லாட்ஜ் போல மாற்றிவிட்டார் எனவும், அதை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் கஞ்சா கருப்பு தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு போலீசுடன் சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி கதறினார். தனது கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை, 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை என சொல்லி போலீசிடம் கதறி இருக்கிறார். வீட்டில் உரிமையாளர் தான் பொருட்களை சேதமாக்கி இருக்கிறார் என கஞ்சா கருப்பு புகார் கூறி இருக்கிறார்.
Read more : அதிர்ச்சி!! பள்ளி வேனில் வந்த 10 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது கிளீனர்…