fbpx

’ரொம்ப கேவலமா விளையாடுறீங்க’..!! கோபத்தில் வெளியேறிய பாகிஸ்தான் அணி இயக்குனர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சிலும் சொதப்பியதால் அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் போட்டியை பார்க்காமலே கடுப்பாகி சென்றார்.

ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் இருந்தது. உலகில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆசிய கோப்பையும் உலக கோப்பையும் நாங்கள் தான் வெல்வோம் என பாகிஸ்தான் அணி ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஆசிய கோப்பையில் சரியான அடி கிடைத்தது. அதன் பிறகு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என்ற நிலையில் ஆப்கானிஸ்தானை நேற்று எதிர்கொண்டார்கள். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 282 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் தோய்வாக இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை 150 ரன்களுக்குள் செலுத்தி விடலாம் என பாகிஸ்தான் பிளான் போட்டது.

ஆனால் பாகிஸ்தானின் பிளானுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிரடி காட்டினர். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சில் கடுமையாக சொதப்பினர். மேலும் வழக்கம் போல் பில்டிங்களும் தடுமாறினர். இதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆத்தர் கடுப்பாகி போட்டியை பார்க்காமல் பாதியிலே வெளியேறினார்.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அடைந்த இந்த தோல்விக்கு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலம் வாய்ந்த பாகிஸ்தானை முதல் முறையாக உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருப்பதற்கு உலக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து கொள்கிறார்கள்.

Chella

Next Post

நவம்பர் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயருகிறது..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

Tue Oct 24 , 2023
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்நாட்டு மதுபான வியாபாரத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.500 வரை உயர்த்தப்பட்டது. மேலும், பல மாநிலங்களில் கலால் வரி உயரும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசும் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள உணவகங்கள், பார்கள், பப்களில், ஓய்வறைகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் […]

You May Like