நாட்டில் மனிதநேயம் மெல்ல மெல்ல சிதைந்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக குழந்தைகள் முதல் எழுந்து நடக்க முடியாத மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களையும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி, அதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டி, சில சம்பவங்களில் கொலை செய்யப்படும் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இதையெல்லாம் விட, விலங்குகளையே பாலியல் வன்கொடுமைக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை, கருத்து வேறுபாடுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் போன்ற காரணங்களால் குடும்பங்களில் கடும் விரிசல்கள் ஏற்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சில நேரங்களில் இத்தகைய மோதல்கள் வன்முறை, தற்கொலை, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களாக மாறி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி ராஜபாளையத்தை […]
இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபாச இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் போலி போலீஸ் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, “ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளீர்கள்”, “உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”, “உடனே கைது செய்யப்படுவீர்கள்” என பயமுறுத்தி பணம் கேட்கும் மோசடி கும்பல்கள், பொதுமக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இதேபோன்ற சைபர் மோசடியில் […]
திருமணத்திற்கு புறம்பான உறவுகள் என்பது இருவர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் நிம்மதியையும் பாதிக்கும். கணவன்-மனைவிக்குள் நம்பிக்கையின்மை, தகராறு, பிரிவு போன்ற பிரச்சினைகள் உருவாகும். சில நேரங்களில் இதுபோன்ற உறவுகள் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்களுக்கும் காரணமாகின்றன. ஆரணி அருகே படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான ரமேஷ். இவருக்கு 26 வயதான லட்சுமி என்ற மனைவ்வியும், 10 வயதான ஹரிஷ் என்ற மகனும், 5 வயதான சதன்யா […]
ஒரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆண்டுக்காண்டு காத்திருக்கும் தம்பதிகள் ஒருபுறம்… பிறந்த குழந்தையின் முதல் அழுகையை கேட்கும் பாக்கியமே இல்லாமல் ஏங்கும் குடும்பங்கள் மறுபுறம். இப்படிப்பட்ட சூழலில், இரண்டாவது குழந்தையும் பெண் என்பதற்காக பிறந்து வெறும் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றதாக வெளியாகியுள்ள கர்நாடக சம்பவம், பெண் குழந்தைகள் மீதான சமூக மனநிலையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் […]
ஒரே இடத்தில் பலர் அமர்ந்திருந்தாலும், சிலரை மட்டுமே கொசுக்கள் அதிகமாக சுற்றி வந்து கடிப்பதை நாம் பலமுறை கவனித்திருப்போம். “என்னை மட்டும்தான் கொசு கடிக்கிறது” என்று பலரும் நினைத்துக் கொள்வார்கள். இதற்கு பல காரணங்களை நாம் யூகித்தாலும், உண்மையில் கொசுக்கள் மனிதர்களைத் தேர்வு செய்வதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட சிலரின் உடலில் இருந்து வெளியேறும் இயற்கையான சிக்னல்கள் கொசுக்களை அதிகம் ஈர்க்கும் தன்மை […]
ஒரு காலத்தில் கடும் வெயிலை சமாளிக்க நம் முன்னோர்கள் மர நிழலில் ஓய்வெடுப்பது, மண் பானை தண்ணீர் குடிப்பது, குளிர்ச்சியான வீடுகளில் தங்குவது, பருத்தி ஆடைகளை அணிவது போன்ற எளிய இயற்கை வழிமுறைகளையே பின்பற்றினர். ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கலால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் வெயிலில் இருந்து பாதுகாக்க புதிய தீர்வுகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், ஜப்பானில் மனிதர்கள் அமர்ந்து உடலை […]
இன்றைய வாழ்க்கை முறையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை முழுமையாகப் பெறுவது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், செரிமானக் கோளாறுகள், உடல் பருமன், இதயநோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், தினசரி உணவில் சில இயற்கை விதைகளை சிறிய அளவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களை எளிதாகப் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சப்ஜா […]
ஒரு காலத்தில் மாலை நேர சிற்றுண்டி என்றாலே வீட்டிலேயே தயாரித்த சுண்டல், அவல், வறுத்த கடலை, நிலக்கடலை, கம்பு அல்லது ராகி கூழ் போன்ற சத்தான உணவுகள்தான் பெரும்பாலான வீடுகளில் இடம் பெற்றன. அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கியதோடு, நீண்ட நேரம் பசியையும் கட்டுப்படுத்தின. ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கை முறையால் பலரும் மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி, சமோசா, சிப்ஸ், பிஸ்கட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளையே […]
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ஒருவராக விமல் திகழ்கிறார். ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், அவர் தொடர்பான ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நடிகர் விமல் தயாரித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக, பைனான்சியர் கோபி என்பவரிடம் […]

