நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் வயில்கள் நீரில் மூழ்கி உள்ளன.. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன.. ஆனால் அறுவை செய்யப்பட்ட நெல், கொள்முதல் செய்யப்படாததால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.. மேலும் வயலில் அறுவை செய்ய வேண்டிய நெல்மணிகளும் முளைக்கத் தொடங்கி விட்டதால் விவசாயிகள் […]

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய இடங்கள் மட்டுமின்றி, பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்குச் சமூக ஊடகங்கள் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு மற்றும் திருமழிசை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 3 பள்ளிகளுக்கு மர்ம நபர் […]

பி.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர உள்ளது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றிய நிலையில் தற்போது ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் ஒரு […]

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகேயுள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (வயது 21). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதுமணத் தம்பதிகளான பாண்டி மற்றும் ரூபிகா இருவரும், தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடுவதற்காக கடந்த 19-ஆம் தேதி ரூபிகாவின் சொந்த ஊரான […]

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னுசாமி மறைவு செய்தி திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் […]

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) அறிவித்திருந்த இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், மற்றும் தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், காவல்துறையினருக்கே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட அந்தப் பெண்ணின் 14 வயது மகனே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் […]