கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன், நொடிப் பொழுதில் காரின் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார். கடத்தல் கும்பல், விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ தூரத்திற்கு அதிவேகமாக காரை இயக்கிச் சென்றது. இதனிடையே தகவல் அறிந்து பின்தொடர்ந்த […]

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனது குடும்பத்திற்குச் செய்வினை வைத்ததாக கூறி, சித்தியை கொடூரமாக கழுத்தறுத்துக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவப்பா என்பவரின் மனைவி சரசம்மா (50). இவர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சிவப்பாவின் அண்ணன் சோமப்பாவின் மகன் அசோக் (27), அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். சரசம்மா தனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து பில்லி, சூனியம் உள்ளிட்ட செய்வினை வைத்து வருவதாகக் […]

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை), தமிழர்களின் ஈடுஇணையற்ற கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்பக்கலைக்குத் தலைசிறந்த சான்றாக விளங்கி வருகிறது. மனிதர்களால் இது சாத்தியமே இல்லை, வேற்று கிரகவாசிகளால் மட்டுமே செதுக்கப்பட்டிருக்க முடியும் என்று வெளிநாட்டினரையே வாய் பிளக்க வைத்த பிரம்மாண்ட வரலாற்றை தன்னுள் தாங்கி நிற்கிறது இத்திருத்தலம். இக்கோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும் உயிருள்ள மனிதர்களை போலவே மிக […]

அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக மதுரை வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். முன்னதாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தையும் மக்கள் பயன்பாட்டிற்காக […]

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற ஊமைச்சாமி (60). விவசாயியான இவர், தனது தோட்டத்து வீட்டில் மனைவி சுப்புலட்சுமி (58) மற்றும் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் மகன் முத்தையா (30) ஆகியோருடன் வசித்து வந்தார். முத்தையாவுக்கும் அவரது மனைவி நந்தினிக்கும் (28) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு நந்தினி பிரிந்து சென்றிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்புதான் முத்தையா சமாதானம் பேசி அவரை […]

கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கை ED கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், 84 வயதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த போக்சோ வழக்கின் விசாரணை தற்போது தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் […]

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக கடந்த மே 15ம் தேதி முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய […]

பெண்கள் தங்களது வேலை மற்றும் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், குறிப்பாக ஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் பல பெண்கள் திருமணத்தைத் தங்களது தொழில் வளர்ச்சிக்கு ஒரு தடையாகக் கருதுகின்றனர். இதனால் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவும் முடிவு செய்கின்றனர். குடும்பங்களில் பாரம்பரியமாக இருந்து வரும் பாலின பாத்திரங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, […]

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மாத கடைசி நாட்களிலேயே சம்பளப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்பதால், இந்த வேலைநிறுத்தத்தால் உரிய காலத்தில் ஊதியம் கிடைக்குமா, […]

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, அதற்கான அரசாணையை கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் எனக்கூறி, […]