நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா 10 ஆயிரத்து 245 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க இசக்கி சுப்பையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. தனக்கு எதிரான […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ஈர மண் குவியல் திடீரென சரிந்து விழுந்த விபத்தில், 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். கஸ்தம்பாடி அடுத்த போளூர் கிராமப் பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் புதிய கிணறு வெட்டும் பணி நடந்து வந்தது. இப்பணியில் செல்வமணி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கிணற்றின் ஆழமான பகுதியில் இறங்கி மண்ணை அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். […]
சென்னைக்கு செல்லும் தென் மாவட்ட வாகனங்களின் பிரதான நுழைவு வாயிலாக திகழும் பரனூர் சுங்கச்சாவடியில், அதிநவீன தானியங்கி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (Multi-Lane Free Flow – MLFF) இன்று (அக்டோபர் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், டோல்கேட்டில் ஸ்கேன் செய்வதற்காக வாகனங்களை நிறுத்தும் அவசியமின்றி, இயல்பான வேகத்தில் பயணிக்கும்போதே சுங்கக் கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும் நவீன வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை – […]
தமிழகத்தையே உலுக்கிய சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி உட்பட மூன்று முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஜெம் கிரானைட்ஸ் அதிபரான தொழிலதிபர் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவருக்கு உடந்தையாக செயல்பட்ட புரோக்கர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் […]
கூவம் மற்றும் அடையாறு நதிகளைச் சீரமைத்து, சிங்கப்பூரின் ‘கல்லாங்’ மற்றும் சியோலின் ‘செயோங்கிசியோன்’ நதிக்கரைகளைப் போல படகு சவாரி, நடைபாதைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ‘சர்வதேச தரத்திலான’ நதிக்கரைகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உலகளாவிய டெண்டர்களும் கோரப்பட்டுள்ளன. இருப்பினும், நகரின் கழிவுநீரும் குப்பைகளும் நதிகளில் தொடர்ந்து கலப்பதைத் தடுக்க முடியாமல் சென்னை மாநகராட்சி தவித்து வரும் நிலையில், இத்தகைய பிரம்மாண்ட […]
செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் பிறந்துள்ளது. சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை, குடும்ப பட்ஜெட் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மானியம், வங்கிகளில் நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள், பிறப்பு – இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள், என்.ஆர்.ஐ சொத்து வாங்குவதற்கான வரி விதிகள் மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களின் விலை […]
மனித வாழ்வில் எதிர்பாராத பின்னடைவுகள், தொடர் நஷ்டங்கள் மற்றும் திடீர் உடல்நலக் கோளாறுகளுக்கு பல நேரங்களில் மற்றவர்களின் பொறாமை கலந்த பார்வையே முக்கிய காரணமாக அமைகிறது என ஆன்மிக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜாதகத்தில் நிலவும் அசுப கிரக சேர்க்கைகளை விடவும், தீவிரமான ‘கண் திருஷ்டி’ ஒருவரது நிம்மதியையும் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்பது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகமாகும். இத்தகைய கொடிய எதிர்மறை அதிர்வுகளையும் திருஷ்டிகளையும் தகர்த்தெறிந்து குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை […]
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது விரல் ரேகை அல்லது கருவிழிப் பதிவு மூலம் ‘இ-கேஒய்சி’ (e-KYC) சரிபார்ப்பை முடிக்காவிட்டாலும், அவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தகுதியுள்ள எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை நிறுத்தவோ அல்லது விநியோகிக்க மறுக்கவோ கூடாது என அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் […]
தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் பேசுகையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல செயல்பட்டு, திரைமறைவில் கைகோர்த்துக்கொண்டு நாடகமாடி வருவதாக முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை தாம் கையில் எடுத்ததும் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒரு நியாயம் உண்டு; ஆனால் எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஏன் கொதித்தெழுந்து திமுகவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்று சரமாரியாக […]
அரசு ஊழியர்கள் அலுவலகப் பணியில் இருக்கும்போது அதிகபட்சமாக தங்களிடம் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம் என்பது தொடர்பான தெளிவான கொள்கை முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், அப்போதைய சார்பதிவாளர் கலா என்பவரிடம் கணக்கில் வராத ரூ.45,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப் […]

