2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டராகப் பணிபுரியும் இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும் (26) இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக, பிரியாவின் நடத்தை மீது சிலம்பரசனுக்குச் சந்தேகம் ஏற்படவே, கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த பிரியா, பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதும், பின்னர் சமாதானமாகி கணவருடன் […]

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, பல மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் பள்ளி, […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி என்பவரின் மகள் பவானி (வயது 17), சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி, வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து வீட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, மாணவி பவானி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையின் […]

11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி,தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை கனமழைஎச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் […]

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய […]

தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. […]

தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் கூடிய 3240 பார்கள் உள்ளன.. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.120 கோடி முதல் 130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது.. வார இறுதி நாட்களில் ரூ.140 கோடி முதல் ரூ.150 வரை உயரும். குறிப்பாக பண்டிகை காலங்களில் மது விற்பனை 15% அதிகரிக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் […]