ஆன்மிக சிறப்புகள் நிறைந்த புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி பிரம்மோற்சவம், தேவி பராசக்தியின் நவராத்திரி வைபவம் மற்றும் பெருமாள் ஆலய உற்சவங்கள் நினைவுக்கு வரும். இதில் மிக முக்கியமாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமால் அவதாரமான திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது விசேஷ பலன்களை தரக்கூடியதாகும். சனீஸ்வர பகவான் அவதரித்த மாதம் புரட்டாசி என்பதால், ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டமச் சனி உள்ளிட்ட சனிதோஷங்களால் ஏற்படும் இடர்ப்பாடுகள் நீங்கி நல்வாழ்வு பெற, […]

அரியலூர் மாவட்டம் செந்துறை வள்ளலார் நகரில் மெயின் ரோட்டில், சுப்பிரமணியன் என்பவர் வீடு கட்டி வருகிறார். கட்டிடத்தின் பின்புறம் செப்டிக் டேங்க் கட்டப்பட்டு, உள்புறத்தில் வேலை நடந்து வந்தது. இங்கு வேலை செய்து வந்த தினகரன் என்பவர் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி மரப்பலகைகளை அகற்ற முயன்றார். அப்போது, விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக பாஸ்கர், ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து செப்டிக் டேங்கிற்குள் இறங்கினர். அவர்களும், விஷவாயு […]

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அவ்விரு தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு மையப் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு வாக்குப்பதிவு அன்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய இருவரும் தங்களது […]

தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டுப் பணியில், தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட இரண்டு பொறியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் (CRIF) கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகையில் மூன்று மொழிகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பான தகவல் […]

பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கிப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை எட்டையபுரம் பிரதான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அதே […]

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை அக்டோபர் 2 இன்று முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். தொடக்க விழாவில் பயணிகள் மற்றும் பெண்களிடம் நேரடியாகக் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், பயனாளிகளுக்கு இலவசப் பேருந்து பயணச்சீட்டுகளை வழங்கி இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு […]

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (அக். 2), மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் […]

தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அரசுப் பேருந்து இலவச பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, புதிய பரிமாணத்துடன் ‘வெற்றிப் பயணத் திட்டம்’ என்ற பெயரில் முதல்வர் விஜய் இன்று (அக். 2) துவக்கி வைக்கிறார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ‘விடியல் பயணத் திட்டம்’ என்ற பெயரில் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போதைய தவெக அரசு, இத்திட்டத்தை […]

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், ஓய்வுபெறும் கோவில் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்துப் பணப்பலன் பெற்றுக்கொள்ளும் புதிய சலுகையும் அமலுக்கு வந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் […]

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று (அக். 2) தொகுதி முழுவதும் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இத்தொகுதி காலியானது. இதையடுத்து வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் […]