தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘அதி கனமழை’க்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் […]

சென்னையை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வள்ளலார் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (43). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே இருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பிரகாஷுக்கு வலது மற்றும் இடது கை மணிக்கட்டுகள், பின்பக்க கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் […]

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது.. அதிமுக – தவெக கூட்டணி சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.. எனவே தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் சரியான தலைவர்.. சரியான முடிவை எடுக்காததால் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எதிர்காலம் […]

சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது. முன்பு, […]

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள்வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-மும், மருத்துவப்படி ரூ.500/உம் என மொத்தம் […]

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று, கடந்த சில நாட்களாகக் கடுமையான சளிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் சளிக்கான சொட்டு மருந்து ஒன்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தச் சொட்டு மருந்தைக் குழந்தைக்கு கொடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தை திடீரென மயங்கி […]