அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உட்பட […]

விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை […]

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துக்கூட நடக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் […]

திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயா தேவி என்பவரது இடத்தில் 42 தகரக் கொட்டைகள் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. வட மாநில […]

தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் […]

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் மக்களிடையே உரையாற்றிய அவர் “ அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பணம் இவர்களை உறுத்துகிறது.. கோயில் கட்டுவதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.. அது அறநிலையத் […]

சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை […]