சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ரதிதேவி (27). இருவரும் காதலித்து வந்த நிலையில், பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு தற்போது 11 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும், 7 வயதில் ஸ்ரீகரன் என்ற மகனும் உள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்டபோதிலும், சில காலமாக மனைவி ரதிதேவியின் நடத்தை மீது […]

செங்கல்பட்டில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக அரசியல் நிலைப்பாடு மற்றும் விசிகவின் கூட்டணி நிலை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நேரடி எதிர்ப்புக் குரலாக இருப்பது விசிகதான். இங்குள்ள பிரச்சனை விசிகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. இதை சாதியப் பிரச்சனையாகத் திரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்கிற தவறான […]

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகனாக இருந்ததால், நடிகர் விஷால் சினிமாத் துறைக்குள் நுழைவது எளிதாக இருந்தது. ஆரம்பத்தில் இயக்குநர் ஆகும் ஆர்வத்துடன், நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘திமிரு’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்கள் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்களாக வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றதால், தமிழ் திரையுலகில் விஷாலின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. இந்த ஆரம்ப வெற்றியைத் […]

கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொட்டாவி விட்ட இளைஞருக்கு திறந்த வாயை மூட முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட […]

நாமக்கல் மண்டலம், தென்னிந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகளில், சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 6 கோடியைத் தாண்டி நிற்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த […]

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பெய்த கனமழையால், வெள்ள நீர் சூழ்ந்து கோழிப்பண்ணை ஒன்று நீரில் மூழ்கியது. இதில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் தேவாரம் – மறவபட்டி சாலையில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று […]