வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து 2025 ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால […]

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக […]

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி […]

சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஆண்டுதோறும் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த […]

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் 2 லிட்டர் இலவசம் என்றும், 5 லிட்டர் வாங்கினால் 2.5 லிட்டர் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், இலவசமாக பெட்ரோல் […]

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி உருவாகக்கூடும். தமிழக பகுதிகளின் […]

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 […]

பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. விசாரணையில் நீதிபதி பொன்முடிக்கு பல கேள்விகளை […]