திரைப்படங்கள் மற்றும் தனது விருப்பமான கார் பந்தயம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, அஜித் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டில், மகிழ் திருமேனி இயக்கத்தில் […]

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இந்த நிலையில் தென்கிழக்கு […]

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க […]

சமையலில் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை நிலவரம் தான் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாத பட்ஜெட்டை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து உணவுகளிலும் இவற்றுக்கு முக்கிய இடம் இருப்பதால், காய்கறி சந்தைக்குச் செல்வோர் மற்ற பொருட்களை வாங்கினாலும் இந்த இரண்டையும் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது […]

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், ஆட்சிக்கு வந்தப் பிறகு 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, முதலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, […]

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இதன் தாக்கத்தால் அக்டோபர் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு […]

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.இந்த 21 மாதகால பகுதி நேர படிப்பில் சேரும் பணிபுரிவோர் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் […]

நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு […]