உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை […]

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக கல்லூரி மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. […]

இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]