fbpx

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். 

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் …

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இரவுக்குள் ராஜினாமா செய்துவிடுவார் என்று சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தன்னுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று இரவுக்குள் ராஜினாமா கடிதம் உங்களுக்கு கிடைக்கச் செய்வேன் என கோத்தபய ராஜபக்ச தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக …

தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த சசிகலா, காப்பகத்திற்கு வருகை தந்து மாணவியைப் பாராட்டினார். பின்னர், மாணவி லட்சுமி தனது கால்களால் வரைந்த …

கோவிலாக நினைக்கக் கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர் ஓபிஎஸ்’ என்று கோகுல இந்திரா கடுமையாக பேசியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை, கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், …

எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. நடந்த பொதுக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.…

நாட்டில் அவசரநிலையை பிறப்பிக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இல்லை என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிபருக்கான கடமையை நிறைவேற்ற இயலாத நிலையில், பிரதமரான ரணில் விக்ரமசிங்கே செயல் அதிபருக்கான அதிகாரத்தை பெற்றிருப்பதாகவும், எனவே, செயல் அதிபர் என்ற முறையில் நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்திருப்பதாகவும், கொழும்பு …

நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் …

’திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துவிட முடியும்’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக, ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ (எடப்பாடி பழனிசாமி) மாதிரி செயல்படக் கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள். …

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து …

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்க கல்விக் கொள்கை குழு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், அதற்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து …