fbpx

தேசிய செய்திகள்

  • வாக்கி-டாக்கி விற்பனைக்கு அதிரடி தடை!. அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, OLX நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!. மத்திய அரசு அதிரடி!

    Walkie-talkies: முறையான அதிர்வெண் விவரங்கள், உரிமம் தொடர்பான தகவல்கள் மற்றும் சாதன வகை ஒப்புதல் இல்லாமல் வாக்கி-டாக்கிகளை பட்டியலிட்டு விற்பனை செய்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, ஒஎல்எக்ஸ் போன்ற முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்பிளேஸ்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த நடவடிக்கை, அத்தகைய சாதனங்கள் நுகர்வோருக்கு ஆபத்தானவையாக இருக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வயர்லஸ் சாதனங்களை பயன்படுத்துவதற்கான சில சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் உள்ளன, அவற்றை மீறியுள்ளதற்காக இந்த நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.

    நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, வாக்கி-டாக்கிகள் ஆன்லைன் விற்பனை தளங்களில், அவற்றை பயன்படுத்த தட்டறையில்லாமல், சட்டப்பூர்வமான உரிமங்கள் தேவைப்படுவதையும், சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டிய தேவையைப் பற்றிய அவசியமான மற்றும் தெளிவான தகவல்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது வழக்கமான விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    முதல் கட்ட ஆய்வில், அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, டிரேட் இந்தியா ஆகிய ஆன்லைன் தளங்களில் உரிய ஒப்புதல்கள் மற்றும் சட்ட பின்பற்றுதல் இல்லாத வாக்கி-டாக்கி சாதனங்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது வெளியானது. குறிப்பாக, அமேசானில் சுமார் 467, பிளிப்கார்டில் 314, மீஷோவில் 489, மற்றும் டிரேட் இந்தியாவில் 423 பட்டியல்கள் காணப்பட்டுள்ளன. இது இந்த பிரச்சனை எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

    இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறுகையில், சட்டப்படி ஒப்புதல் பெறாத வையர்லெஸ் சாதனங்கள் விற்பனை செய்யப்படுவது சட்ட விதிகளை மீறுவதுடன், தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும், இது மிகவும் கவலைக்குறியது எனவும் கூறினார். இதன் காரணமாக மின் வணிக தளங்களில் வாக்கி-டாக்கி விற்பனைக்கு எதிராக CCPA நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பதிவிட்டுள்ளார்.

    “அனைத்து விற்பனையாளர்களும் நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்தவும் சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை தரநிலைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

    இந்த தளங்களில் Amazon, Flipkart, Meesho, OLX, TradeIndia, Facebook, Indiamart, VardaanMart, Jiomart, Krishnamart, Chimiya, Talk Pro Walie Talkie மற்றும் MaskMan பொம்மைகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், வாக்கி-டாக்கிகளுக்கான தயாரிப்பு பட்டியல்கள், சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து உரிமம் தேவையா என்பதைக் குறிப்பிடவில்லை. இது நுகர்வோரிடம் தவறான புரிதலை ஏற்படுத்துவதோடு, அச்சுறுத்தலான மற்றும் சட்டவிரோதமான பயன்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.

    அதாவது, இந்திய தொலைக்காட்சி சட்டம், 1885 (Indian Telegraph Act, 1885), வயர்லெஸ் தொலைக்காட்சி சட்டம், 1933- இன் கீழ் உரிமக் கடமைகள் மற்றும் குறைந்த சக்தி, மிகக் குறைந்த சக்தி கொண்ட குறுகிய தூர ரேடியோ அதிர்வெண் சாதனங்களின் பயன்பாடு (உரிமம் தேவையிலிருந்து விலக்கு) விதிகள், 2018″ ஆகிய சட்டங்களின் கீழ் தேவையான தகவல்கள் கூறப்படாமையால், பொதுமக்கள் இவற்றை எளிதாக மற்றும் உரிமம் இல்லாமலே பயன்படுத்தலாம் என்ற தவறான நம்பிக்கையை உருவாக்குகிறது. குறிப்பாக அதிர்வெண் வரம்பு, உரிமம் தொடர்பான கட்டாயங்கள், குறிப்பிடப்படாமல் விடப்படுவது, மிகவும் தவறான வழிகாட்டலாக இருக்கிறது என்று நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 2020 அடிப்படையில், மார்க்கெட்பிளேஸ் வகை மின்னணு விற்பனை நிறுவனங்கள் நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்குப் முன் தெளிவான, எளிதாக அணுகக்கூடிய, மற்றும் தேவையான தகவல்களை வழங்க வேண்டும். இது நுகர்வோர் வாங்குவதற்கு முந்தைய கட்டத்தில் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அத்தியாவசிய ஒழுங்குமுறை வெளிப்படுத்தல்கள் இல்லாத நிலையில், இணங்காத வயர்லெஸ் சாதனங்களை விற்பனை செய்வது நுகர்வோரை தவறாக வழிநடத்துகிறது மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை கடுமையாக மீறுவதாகும். பல தளங்கள் அதிர்வெண் வரம்பை தெளிவாகக் குறிப்பிடாமல்; வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு (WPC) பிரிவிலிருந்து செல்லுபடியாகும் உபகரண வகை ஒப்புதல் (ETA) இல்லாமல்; மற்றும் நுகர்வோருக்கு உரிமத் தேவைகளை முறையாக வெளியிடாமல் வாக்கி-டாக்கிகளை விற்பனை செய்ய அனுமதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    எனவே, ஒவ்வொரு விற்பனையாளரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள், தயாரிப்பு URLகள் மற்றும் வாக்கி-டாக்கி சாதனங்களின் பட்டியல் ஐடிகள், அதிர்வெண் விவரக்குறிப்புகள் விவரங்கள் மற்றும் பட்டியல்களில் காட்டப்பட்டுள்ள ஏதேனும் உரிமத் தகவல்கள், இந்த தயாரிப்புகளுக்கான ETA/WPC சான்றிதழ் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதா அல்லது சரிபார்க்கப்பட்டுள்ளதா; மற்றும் ஜனவரி 2023 முதல் இன்றுவரை ஒரு பட்டியலுக்கு விற்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை மத்திய ஆணையம் கோரியுள்ளது.

    மேலும், மின் வணிக நிறுவனங்கள் தற்போதுள்ள சட்ட விதிகளை அதிகமாகப் பின்பற்றாததைக் கருத்தில் கொண்டு, சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வெளியிடுவது அவசியம் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது

    Readmore: குட் நியூஸ்..! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பு… மே 13-ம் விண்ணப்பிக்க கால அவகாசம்..!

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]