பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது,சாலையில் கோஷமிட்டு ஊர்வலமாக போவது ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொது இடங்களில், மக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அனைத்து கல்லூரிக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களிலும் […]
சென்னை விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் குடியிருப்பவர் சேகர் (35). இவர் வடபழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்டில், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும், ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்தள்ளது. இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பரணி உடனே தனது நண்பர்களை வரவழைத்து சேகரை சரமாரியாக […]
தூத்துக்குடியில் காதலனுடன் இருந்த சிறுமிக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவரை பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர், முன்னதாக திருச்செந்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில், கடந்த 10.10.2019 அன்று இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு போலீஸ் சீருடையில் […]
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுஉடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் அமைத்துள்ள மருத்துவ குழு மருத்துவமனைக்கு வந்துள்ளது. ஆனால், மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட யாரும் அங்கு வரவில்லை. தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனால் உடற்கூராய்வு இன்று நடைபெறுமா? நடைபெறாதா? […]
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. […]
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.. இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆந்திர மாநில அரசு இந்த நிதியை வேறு […]
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்தார்.. மேலும் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும், 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்கிறது. அதாவது, 200 […]
நீட் தேர்வெழுதுவதற்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்னதாக கூறிய மாணவியின் குற்றச்சாட்டை தேசிய தேர்வு முகமை நிராகரித்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு நேற்று முன் தினம் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். பல சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு […]