fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!. திடீர் முடிவிற்கு என்ன காரணம்?. அடுத்து என்ன நடக்கும்?.

    Justin Trudeau: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டு பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சிக்கலை ஏற்படுத்தினார். அதே சமயம், ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சி தெரிவித்திருந்தது.

    ட்ரூடோ கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்துள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.

    புதிய தலைவரை தேர்வு செய்த பின்னர் ராஜினாமா செய்து விடுவேன். இதற்கான வேலைகளில் ஈடுபடுமாறு லிபரல் கட்சியின் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார். மேலும் பேசுகையில், நான் ஒரு போராளி. எனது உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பும் எப்போதும் சொல்லி கொண்டே இருக்கும். கனடா மக்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இரு. இந்த நாட்டிற்காக எந்நேரமும் சிந்தித்து கொண்டே இருப்பேன். கனடா மக்களுக்கு எது தேவையோ அதை செய்வதில் ஆர்வம் காட்டுவேன்.

    கனடா அரசியல் வரலாற்றில் மைனாரிட்டி நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இதனால் அதன் பணிகள் முடங்கியுள்ளன. எனவே தான் கவர்னல் ஜெனரலுக்கு ஒரு ஆலோசனை வழங்கினேன். நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். இந்நிலையில் தான் வரும் மார்ச் 24ஆம் தேதிக்கு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் எனது குடும்பத்தினருடன் நீண்ட உரையாடலை நிகழ்த்துவேன்.

    எனது எதிர்காலம் பற்றி மனம் விட்டு பேசுவேன். எனது வாழ்க்கையில் இதுவரை நான் சாதித்ததற்கு எனது குடும்பத்தினர் தான் காரணம். அவர்களின் ஊக்கத்தால் தான் இதுவரை வந்திருக்கிறேன். நேற்று முன் தினம் இரவு டின்னர் சாப்பிடும் போது கூட, என்னுடைய ராஜினாமா முடிவு பற்றி எனது பிள்ளைகளிடம் தெரிவித்தேன். வரவிருக்கும் தேர்தல் எனக்கு பிரகாசமான வாய்ப்புகளை வழங்காது என்று கருதுகிறேன். உள்ளுக்குள் நிறைய போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே அடுத்த தேர்தலில் சரியான தலைவரை இந்த நாடு தேர்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    கனடாவில் அடுத்து என்ன நடக்கும்? ட்ரூடோவின் ராஜினாமாவுக்குப் பிறகு, லிபரல் கட்சிக்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலில், நாட்டைப் பொறுப்பேற்கும் இடைக்காலத் தலைவரை கட்சி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது தெரிவு, நாட்டின் தலைமைக்கான கட்சிக்குள் தேர்தல் நடத்தி முழுநேர பிரதமரைத் தேர்ந்தெடுப்பது. இதற்கிடையில், கனடாவில் இந்த ஆண்டு அதாவது அக்டோபர் 2025 இல் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Readmore: இந்தியாவில் HMPV பாதிப்பு 5 ஆக அதிகரிப்பு!. தயார் நிலையில் மாநில அரசுகள்!. கவலைப்படத் தேவையில்லை!. மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா!.

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

வாஸ்து சாஸ்திர விதிகளின், நமது வீட்டில் நேர்மறை ஆற்றலை ராமரிப்பது முக்கியம். நம் வீட்டில் உள்ள பொருட்கள் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை இது குறிக்கிறது. நமது தொழில் மற்றும் உறவுகள் முதல் நமது பொது நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் வரை அனைத்தையும் பாதிக்கிறது. எதிர்மறை ஆற்றலை விரட்ட உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கக் கூடாத 7 ஓவியங்கள் குறித்து பார்க்கலாம். உடைந்த கலைப்படைப்பு உங்கள் அலமாரிகளில் […]