fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • வேற்று கிரகத்தில் உயிர்கள்.. வலுவான ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விஞ்ஞானிகள்..!!

    பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பெரிய கோளில் வேற்று கிரகவாசிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது என வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘K2-18 b’ என்ற பெயருள்ள அந்த கோளை, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கவனித்தபோது, அதில் டைமெதில்சல்பைடு (DMS), டைமெதில்டைசல்பைடு (DMDS) என்ற இரு வேதிப்பொருட்களின் அடையாளங்கள் கிடைத்துள்ளன. இந்த இரண்டும் பூமியில் உயிரினங்கள் இருக்கும்போதுதான் உருவாகும்.

    இந்த ஆய்வுகளை வழிநடத்தியது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் நிக்கு மதுசூதன் என்பவர். அவர் ஒரு வானியற்பியல் வல்லுநர். இது, சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான மிகவும் வலுவான சான்று என்று அவர் கூறினார். அதே நேரத்தில், இந்த வேதிச்சேர்மங்களின் அடையாளங்கள் உண்மையாகவா இருக்கின்றன? அவை உண்மையில் உயிரியல் செயல்களுக்கே நேரடி தொடர்பா? என்பதைக் குறித்து மிகவும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், முன்னேற்றத்தில் மிதமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும் “இந்த தருணம், வருங்காலத்தில் வரக்கூடிய பல தசாப்தங்களில், ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படும். இது, பிரபஞ்சத்தில் நாம்தான் ஒரே உயிரினமா? என்ற கேள்விக்கு பதில் தேடுவதில், மனிதகுலத்தை மிக அருகில் கொண்டுவந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

    K2-18 b எனும் கிரகத்தில், உயிர்கள் வாழக்கூடிய நிலைமைகள் உள்ளதா என்பது ஒரு கேள்வி. இந்தக் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட DMS மற்றும் DMDS போன்ற வேதிப்பொருட்கள், பூமியில் கடல்களில் உள்ள சிறிய உயிரிகள் பைட்டோபிளாங்க்டன்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இவை உண்மையில் “உயிரின் அடையாளங்கள்” (biosignatures) என்று கூற முடியுமா என்பது குறித்து சில விஞ்ஞானிகளுக்கு குழப்பம் உள்ளது.

    கோள் K2-18 b: K2-18 b என்ற இந்த கோள், சிம்ம விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது. இது பூமியை விட சுமார் ஒன்பது மடங்கு பெரியது, மேலும் அதன் அளவு 2.6 மடங்கு அதிகம். இந்த கோள், அதனைச் சுற்றி வரும் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்திற்குள் இருக்கிறது. அந்த நட்சத்திரம், சூரியனைவிட சிறியது மற்றும் சிறிது குளிர்ந்த சிவப்பு நிறம் கொண்டது.

    2019ஆம் ஆண்டு, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி K2-18 b-இன் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதை கண்டுபிடித்தது. இதையடுத்து விஞ்ஞானிகள், இந்த கோளை “நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் மிகவும் வாழக்கூடிய உலகம்” எனக் குறிப்பிடத் தொடங்கினர். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், பேராசிரியர் மதுசூதன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தொடர்ச்சியான புதிய அவதானிப்புகள், முந்தைய கணிப்பில் கண்டறியப்பட்ட நீர் ஆதாரம் மீத்தேன் என்பதை வெளிப்படுத்தின. இந்த கோள், பரந்ததும் ஆழமுமான கடலை கொண்டிருக்கக்கூடிய ஒரு வாழக்கூடிய உலகமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

    K2-18 b கிரகத்தில் உயிர்கள் உள்ளதா? K2-18 b, மற்ற கிரகங்களிலிருந்து பரந்த தூரத்தில் உள்ளதால், அதை நேரடியாக ஆராய்வது சாத்தியமில்லை. இருப்பினும், விஞ்ஞானிகள் அதன் அளவு, அடர்த்தி, வெப்பநிலை மற்றும் வேதியியல் கலவையை ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்புகளில், DMS மற்றும் DMDS என்ற வேதிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இது K2-18 b கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள சிக்னல்களின் முக்கியத்துவத்தை குறிக்கின்றன. இவை பூமியில் உயிரியல் செயல்களில் காணப்படும் பொருட்களாகவும் உள்ளன.

    மதுசூதன் மற்றும் பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியலாளர்கள், உயிரியல் அல்லாத செயல்முறைகள் இந்தச் சிக்னல்களை உருவாக்க முடியுமா என சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கரோலின் மோர்லி மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோ பார்ஸ்டோவ் ஆகியோர், இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டாலும், வாழ்க்கையின் ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கான தரநிலைகள் மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Read more: குற்றப்பத்திரிகை ஏன் தாக்கல் செய்யப்படுகிறது.. நீதிமன்றத்தில் அதன் முக்கியத்துவம் என்ன..? – பலருக்கு தெரியாத தகவல் இதோ

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]