fbpx

’அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பாஜக ஆட்சி கவிழும்’..!! ’பேசாம காங்கிரஸ் இருந்திருக்கலாம்’..!! சுப்பிரமணியன் சுவாமி தாக்கு..!!

”எனது கணிப்புப் படி இந்த ஆட்சி அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், ”பாஜக ஆட்சி அமைத்திருக்கவே கூடாது. எதிர்க்கட்சியாகக் கொஞ்சக் காலம் அமர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விட்டிருக்க வேண்டும். அந்த ஆட்சி கொஞ்ச நாளில் கவிழ்ந்து இருக்கும். அதன் பின்னர் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம்.

ஆகவேதான், அவரது அமைச்சரவையில் ஜால்ரா போடுகின்றவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டுள்ளார். நான் மோடியின் தலைமையை ஏற்கவில்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அதை இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது.
நான் தான் முதலில் இருந்தே பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லி வந்தேன். அதைப்போல இப்போது 240 தான் கிடைத்துள்ளது. எனது கணிப்புப் படி இந்த ஆட்சி அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும். அதற்கு மேல் இந்த அரசு தாக்குப் பிடிக்காது.

சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் வந்த பிறகு எப்படி இந்தத்துவாவைப் பற்றிப் பேச முடியும்? அதைப் பேச இவர்களுக்கு இப்போது தைரியம் இருக்குமா?. அப்படிப் பேசினால், இந்த இருவரும் கூட்டணியை விட்டுச் சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் அழைத்தால் நிதிஷும் நாயுடுவும் போய் விடுவார்கள். தேர்தலுக்கு முன்பாக நாயுடு காங்கிரஸ் கூட்டணியில்தானே இருந்தார். அப்புறம் பல்டி அடித்து பாஜகவுக்கு வந்துவிட்டார். இப்படி ஒரு கொள்கை இல்லாமல் அரசியல் செய்யக் கூடாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More : இப்படி ஒரு மோசடியா..? இனியும் சும்மா இருக்கா மாட்டோம்..!! சுற்றுலா பேருந்துகளுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!

English Summary

“According to my prediction, this regime will be overthrown by March next year,” criticized senior BJP leader Subramanian Swamy.

Chella

Next Post

வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் Gen AI.. ஊழியர்கள் ஷாக்..!! வெளியான ரிப்போர்ட்!!

Tue Jun 11 , 2024
With the help of generative AI, IT staff can save about 2.6 million hours, the report said. It is also said that through this the right training programs, videos etc. can be easily learned by the people working in the technical sectors.

You May Like