fbpx

Gold Rate Today | வருடத்தின் முதல் நாளே ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. டிசம்பர் மாதம் முதலே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், புத்தாண்டின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று, இன்று (01.01.25) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5905க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; பட்டா, பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளணுமா..? இந்த ஒரு App போதும்.. சீக்கிரமே வேலை முடிஞ்சிடும்..!!

English Summary

Today, the opening day of the new year, the price of gold has risen dramatically.

Next Post

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் வேலை.. 760 காலிப்பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. உடனே விண்ணப்பிங்க!! 

Wed Jan 1 , 2025
Public Works Department of Tamilnadu Government has released notification for Apprentice Training Vacancies.

You May Like