fbpx

பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில், தற்போது வரை பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் கொரோனா …

இன்று நீலகிரி, கோவை, தேனி, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று; நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், …

கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது. முழுவதுமாக உள்நாட்டில் டிசைன் செய்து அமைத்துள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி இருக்கிறது. இந்த கப்பல் அடுத்த மாதம் முறைப்படி நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு, இந்திய கடற்படையில் இணைக்கப்படும்.

அப்போது இந்த கப்பல், ஐ.என்.எஸ். …

குடும்பத்துடன் காரில் ஊர் ஊராக சென்று, கோவில் திருவிழாக் கூட்டத்திற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்லும் களவாணி குடும்பத்தை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் நடந்த கோவில் திருவிழாக்களில் கூட்டத்திற்குள் புகுந்து பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை களவாடிய கொள்ளையர்களை பிடிக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு தனிப்படை ஒன்றை …

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 29-வது நாளாக தடை விதித்துள்ளது.

கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தமிழக காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. …

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், போதுமான பரிசோதனையை உறுதி செய்யவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்கவும், 6 மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.. அந்த …

கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டது. அணை அதன் கொள்ளளவை எட்டியதால் கேரளாவில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையால் இடுக்கி, கண்ணூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 22 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நேற்று …

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து …

புதுடெல்லி, தற்போது உலகளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை எட்டு பேர் குரங்கு அம்மை நோயால் பாதிப்படைந்துள்ளனர். கேரளாவில் ஐந்து பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று …

தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தென்மேற்கு பருவமழை பொருத்தவரையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் நேற்று வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவையில் 242 மி.மீ மழை …