பணம், சொத்து, செல்வம் என வாழ்க்கையில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், ஆரோக்கியம் இல்லையென்றால் அவற்றை அனுபவிக்க முடியாது. ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கும் கொடுக்க வேண்டும். அதற்கு விலை உயர்ந்த உணவுகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அன்றாட உணவில் சத்தான காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டாலே ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கும் முருங்கைக்கீரையையும் […]

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட முழுமையான தடை தொடர்ந்து அமலில் உள்ளதா அல்லது புதிய தளர்வுகள் இங்கும் பொருந்துமா என்பது குறித்து பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருக்கோவிலின் புனிதம், பாதுகாப்பு மற்றும் கருவறை ரகசியங்களை காக்கும் பொருட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பழனி மலைக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் முற்றிலுமாக தடை […]

இந்து சமய வழிபாட்டில் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்குரிய உன்னதமான மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. இம்மாதத்தின் அனைத்து நாட்களும் சிறப்புமிக்கவை என்றாலும், இதில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவது மகத்தான பலன்களைத் தரும். பெருமாளின் அருளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், சனி பகவானின் கெடுபலன்கள் மற்றும் ஏழரைச் சனி தோஷங்களில் இருந்து விடுபட்டு அவரின் அருளாசியைப் பெறவும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடே மிக சிறந்த நாளாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து தளிகை […]

தமிழகத்தில் சமீப நாட்களாக ‘இன்ஃப்ளூயன்ஸா’ வைரஸ் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளின் பாதிப்புத் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தணிந்த பின்னரும் கூட, ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் உடல்வலி மற்றும் வறட்டு இருமல் நீடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பரவும் வேகம் மற்றும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வைரஸின் வீரியம் […]

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்களின் வசதிக்காக வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. வருகிற 19ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜை மற்றும் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் நியாயவிலை கடை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை […]

அதிமுக, தனது 54 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 55-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா, பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1972-ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களின் நலனுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, அவரது வாழ்நாள் முழுவதும் கண்ணின் இமைபோல […]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் ஆய்வு மைய‌ இயக்குனர் துரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை இன்று, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியது. அதே நேரத்தில், வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் […]

தமிழகத்தில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மாநிலத்தில் உள்ள 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித தடையுமின்றி அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் செயல்படும் 49 அமுதம் அங்காடிகள் மற்றும் 211 கூட்டுறவு கடைகள் வழியாக தரமான […]

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி மற்றும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து மூத்த கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் […]

ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாயகம் திரும்பிய இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பாராட்டினார். இப்போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு வரலாற்றுப் பாதையில் இந்தியா ஈட்டிய இரண்டாவது மிகச் சிறந்த பதக்கப் பட்டியல் இதுவாகும். இன்று (அக்டோபர் […]