இன்று வரை படவாய்ப்புகள் அமையவில்லை என குறிப்பிட்ட ஜெய் இன்றும் கடனில்தான் இருக்கின்றேன் என வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். தேனிசை தென்றல் என அழைக்கப்படும் தேவாவின் உறவினர்தான் ஜெய். திரையுலகில் இசையமைப்பாளராகவேண்டும் என எதிர்பார்த்த ஜெய்க்கு நடிகராக வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடித்த பகவதி என்ற திரைப்படம்தான் இவருக்கு முதல் படம். விஜயின் தம்பியாக நடித்த அவர் நீண்ட இடைவெளிக்குபின்னர் 600028 என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத் […]
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னையில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மகளிர் நிவாகிகள் குஷ்பூ, கௌதமி ஆகியோர் குறித்து திமுக நிர்வாகி சாதிக் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. […]
கர்நாடக திரையுலக பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் புனித் ராஜ்குமார் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே தனக்கு விஷயம் தெரிந்ததாகவும் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தோன்றி 67வது ஆண்டில்அடி எடுத்து வைக்கின்றது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’கர்நாடக ரத்ன’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று விருது வழங்கினார். சமூக […]
கங்கை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஒன்று ஆற்றின் நடுவில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை பிடித்து தப்பித்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கங்கை நதி உள்ளது. இந்த நதிக்கரையில் குரங்கு தாவி தாவி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் தண்ணீரில் தவறி விழுந்தது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஆற்றின் நடுவில் ஒரு அனுமான் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சிலையை கட்டிப்பிடித்தவாறு ஏறி உயிர்தப்பியது. […]
நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை மணமுடிக்கஉள்ளதாகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் வரும் 4-ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் தொழிலதிபரின் பெயர் சோஹைல் கதுரியா என்பதும் அவர் ஹன்சிகாவுக்கு மிகவும் நெருங்கிய நீண்டகால நண்பர் என தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஜெய்பூரில் நடைபெற […]
அந்தமானில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் முக்கிய அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளம்பெண். தலித் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்த பெண் தன் 2 வயதில் அவரது தாயை பறிகொடுத்துள்ளார். அவரது தந்தை ஓவியராக இருந்துள்ளார். தாய் இறந்த சிறிது மாதங்களில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து […]
மாந்தீரிகரின் முட்டாள்தனமான பரிகார யோசனையை கேட்டு, இளம் சிறுமியை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் பிஷ்னுபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு வயது 37. இந்நிலையில், அந்த ஆசிரியர், தான் பணிபுரியும் பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அதாவது 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர வைத்தது. இந்த ஹாலோவீன் திருவிழாவில் அதிகப்படியான இளம் பெண்கள், குழந்தைகள், முதியோர் பங்கேற்றது தெரியவந்த […]
மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்துவிட்டு வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நெக்குண்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிரமாத்தைச் சேர்ந்த தாமு(25) என்பவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுராதா (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தன் அம்மாவீட்டுக்கு சென்றுவிட்டு மாமியார் […]
திருமணத்திற்கு பிறகும் காதல் தொடர்ந்ததால் காதலனை வீட்டுக்குஅழைத்த நிலையில் காதலனே கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இளம் ஜோடி கார்த்தி-பிருந்தா. கர்ப்பிணியான பிருந்தா கடந்த 28-ம் தேதி வீட்டில் பிணமாக இருந்தார். அடுத்த நாள் வீட்டுக்கு வந்து பார்த்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சியானது. இது பற்றி காவல்நிலையத்திற்குகார்த்தி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]