தேசிய செய்திகள்

  • கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைப்பதால் மோடிக்கு என்னென்ன சிக்கல்கள் வரும்..? இனிமே இதையெல்லாம் செய்யவே முடியாது..!!

    பாஜக ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் இடையே உள்ள, வித்தியாசம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் பிரதமராக, வரும் 8ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சிக்கும், இனி அமையப்போகும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, மோடியால் இனி தன்னிச்சையாக எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்றதால், கூட்டணி கட்சிகளை நாட வேண்டிய சூழல் ஏற்படவில்லை. இதனால், பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்ற பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாகவே செயல்படுத்தியது.

    மோடி 3.0 ஆட்சிக்கான கட்டுப்பாடுகள்:

    முன்பு சுதந்திரமான தலைவராக செயல்பட்ட மோடிக்கு, இந்த ஆட்சி காலத்தில் அப்படி இருக்க முடியாது. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து அவர்களின் கருத்துகளை உள்வாங்கியே எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டியிருக்கும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மோடியை மையப்படுத்தியே மொத்த அரசியல் நகர்வும் இருந்தது. ஆனால், அந்த சூழல் கூட்டணி ஆட்சியில் மாறும். மாநில அரசியல் கட்சி தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். அதற்கு நேற்றைய பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்களே சான்று. பல முக்கிய இலாக்காக்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதால், பாஜகவிடம் குவிந்து கிடந்த அதிகாரம் பரவலாக்கப்படும்.

    கூட்டணி ஆட்சியில் மாநில கட்சி தலைவர்கள், தேசிய அரசியலில் மிக முக்கியப் பங்காற்றுவார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், உபியில் அகிலேஷ் யாதவும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளனர். அதேபோல், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மு.க.ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகளும், பிராந்திய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்பதால், பிராந்திய கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

    சீர்திருத்த திட்டங்களில் தாக்கம்:

    பொருளாதார சீர்திருத்தங்கள் ஒரு முக்கியமான மையமாக இருக்கும். ஆனால், குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்ளும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பண்ணை சட்டங்கள் போன்ற பெரிய சீர்திருத்தங்களுக்கான முந்தைய முயற்சிகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன மற்றும் ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. பெரும்பான்மை இருந்தபோதிலும், இந்த மாற்றங்களைச் செயல்படுத்த பாஜக சிரமப்பட்டது. இந்நிலையில் கூட்டணி ஆட்சியில், சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்த கூட்டணி கட்சியினரிடையே பாஜக ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.

    மறுசீரமைத்தல்:

    பாஜக மற்றும் ஆர். எஸ்.எஸ் இடையே அதிகார இயக்கத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இருந்த தனிப்பெரும்பான்மை, முடிவெடுப்பதில் மோடிக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சியை அனுமதித்தன. ஆனால், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுக செல்வாக்கால், அதிகாரத்தில் மறுசீரமைப்பு இருக்கக் கூடும்.

    Read More : ’தமிழ்நாட்டை எப்போதும் உங்களால் ஆள முடியாது’..!! ராகுல் காந்தியின் வீடியோ வைரல்..!!

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

Body Stone: இந்தியாவில் கற்கள் ஒரு பொதுவான பிரச்சனை. இருப்பினும், அதன் சிகிச்சை எளிதானது. ஆனால் சிறுநீரகத்தைத் தவிர, உடலின் பல பாகங்களிலும் கற்கள் ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகளவில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் பாஸ்பரஸ் அளவு அதிகரித்தால், அது கற்களாக மாறும். இது தவிர சிறுநீரகக் கற்களாக மாறலாம். பொதுவாக சிறுநீரக கற்கள் […]

Assam Flood: நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், அசாமில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் அஸ்ஸாமில் ஆண்டுதோறும் பலர் பலியாகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இதற்குப் பின்னால் என்ன காரணம் என்று பார்ப்போம். அசாம் தற்போது வெள்ளத்தின் சீற்றத்தை எதிர்கொள்கிறது. மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள 13 மாவட்டங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு […]