fbpx

’அரசியலில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் அடித்து ஆடும் அண்ணாமலை’..!! வைரல் வீடியோ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை அங்கேயே தங்கி படிக்க உள்ளார். மேலும் படிப்பை முடித்துக் கொண்டு டிசம்பர் மாதம் அவர் மீண்டும் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, அவர் வெளிநாடு செல்லவுள்ளதால், தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக மூத்த பாஜக தலைவர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவும் நிலையில், அண்ணாமலை கூலாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அந்த பதிவில், “எங்கும், எந்த நேரத்திலும் பயிற்சி செய்யுங்கள்! அது ஒருபோதும் வீணாகாது சச்சின்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பகிரும் பாஜக தொண்டர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் அண்ணாமலை பேட்டிங்கை ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்.

Read More : உஷார்..!! தமிழில் பெயர் பலகை..!! இனி கட்டாயம் அபராதம் தான்..!! எவ்வளவு தெரியுமா..?

English Summary

A video of Annamalai coolly practicing cricket is going viral on the internet.

Chella

Next Post

தனது கிராமத்திற்காக மலையையே குடைந்த கூலி தொழிலாளி!! என்ன காரணம் தெரியுமா?

Sat Jul 20 , 2024
A laborer who dug a mountain for his village!! Do you know what the reason is?

You May Like