fbpx

BHEL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சம்பளம் எவ்வளவு..?

திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.10.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை – 11

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை: ரூ. 8,000 வழங்கப்படும்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை – 155

கல்வித் தகுதி : 2021/ 2022/ 2023ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accountant – 10

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் B.Com படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant HR – 10

கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trade (ITI) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை – 430

கல்வி தகுதி: அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: ரூ.7,700 – ரூ.8,050 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தளர்வுகளும் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இப்பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.10.2024

மேலும், விவரங்களுக்கு https://trichy.bhel.com/ என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.

Read More : மனைவியுடன் 15 வயது சிறுவனுக்கு கள்ளத்தொடர்பு..!! நண்பனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை தூக்கி வீசிய கணவன்..!!

English Summary

BHEL has released a notification to fill the vacancies in Trichy.

Chella

Next Post

தூங்கி எழுந்தவுடன் போன் பார்க்கும் பழக்கம் இருக்கா..? ஆபத்து இல்லையென மட்டும் நினைக்க வேண்டாம்..!! மருத்துவர் எச்சரிக்கை..!!

Sat Oct 19 , 2024
Are you the first person to check your phone after waking up? Do you know what the disadvantages are?

You May Like